பரபரப்பு... உச்சநீதிமன்ற வளாகத்தில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை... கொலையாளியும் தற்கொலை!
Dinamaalai January 19, 2025 01:48 PM

ஈரான் நாட்டில் உச்ச நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 2 நீதிபதிகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. முகமது மொஹிரா மற்றும் அலி ரசானி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு ஓய்வு அறையில் இரண்டு நீதிபதிகளும் இருந்தனர்.

அந்த நேரத்தில், துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அங்கு வந்து நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  நீதிபதிகள் மொஹிரா மற்றும் அலி ரசானி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் நீதிபதிகளின் மெய்க்காப்பாளரும் தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரண்டு நீதிபதிகளும் தீவிர அடிப்படைவாத கொள்கைகள் பின்பற்றுபவர்கள் என்றும், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிப்பதில் பெயர் பெற்றவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 

உச்ச நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.