தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விஜயை இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்று விஜய் கூறியதால் அவர் இந்தியா கூட்டணிக்கு வந்தால் தான் அதை ஒழித்து விடலாம் மற்றும் ஓரங்கட்டி விடலாம் என்று கூறினார். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் தற்போது செல்வப் பெருந்தகை விஜய்க்கு நேரடியாக அழைப்பு விடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது இது தொடர்பாக தமிழிசை சௌந்தர்ராஜன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தற்போது தாங்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுக கூட்டணியால் மட்டும் வெற்றிபெற முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறாரா.? விஜயை அழைப்பது விஜய் மீதும் இருக்கும் நம்பிக்கையிலா அல்லது தாங்கள் தங்கள் கூட்டணி மீது இருக்கும் அவ நம்பிக்கையிலா என்ற பதிவிட்டுள்ளார்.