தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மம்மூட்டியை வைத்து டோமினிக் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தபோது துருவ நட்சத்திரம் படம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்போது பேசிய அவர் “துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா தான் முதலில் நடிக்க வேண்டியது. ஆனால் அவர் விலகிவிட்டார். வாரணம் ஆயிரம், காக்க காக்க என வெற்றி படங்களை தான் அவருக்கு கொடுத்திருந்தேன். ஆனாலும் சூர்யா துருவ நட்சத்திரத்தில் இணையாதது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.
அந்த படத்தில் சூர்யா நடித்திருந்தால் அவருக்கு வாய்ப்பு குறைந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. ஆனாலும் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை” எனக் கூறியுள்ளார்.