விடாமுயற்சி ஹாலிவுட் ரீமேக்கா….? “இது என்னுடைய கதை இல்லை” மகிழ் திருமேனி கூறிய பதில்….!!
SeithiSolai Tamil January 19, 2025 10:48 AM

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. அர்ஜுன், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இதனிடையே பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் விடாமுயற்சி என்று செய்திகள் வெளியானது. 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன். படத்தில் கணவன் மனைவி என இருவர் பயணம் மேற்கொள்ள அதில் திடீரென மனைவி காணாமல் போக அவரை நாயகன் தேடி கண்டுபிடிப்பது தான் கதை.

இந்நிலையில் மகிழ்திருமேனியிடம் நேர்காணல் ஒன்றில் விடாமுயற்சி ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் கூறுகையில் “இதற்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. ஆனால் இது எனது கதை இல்லை.

கணவன் மனைவி இடையேயான பயணமும் அந்த பயணத்தில் நடக்கும் சம்பவங்களும் தான் இந்த படத்தின் கதை. இதில் திரில்லர், ஆக்சன், சஸ்பென்ஸ் என அனைத்தும் உள்ளது. இந்த கதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.