தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பூவேலி, ஜாலி, சொல்லாமலே, வானத்தைப்போல, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் கௌசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இது குறித்து நேரலை ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்டபோது தான் ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை என்றும் கூறியுள்ளார் மேலும் குடும்பம் குழந்தை என பெரிய பொறுப்புகளை தன்னால் கையாள முடியுமா என்பது தெரியாததும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.