அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து நடத்திய "சமையல் சூப்பர் ஸ்டார் - சீசன் 2", உணவுக்கென்றே தனித்த பாரம்பரியம் கொண்ட காரைக்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
செஃப் தீனாகோல்டன் சிங்கார் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான ஆண்களும் பெண்களும் பங்கேற்று தங்களது சமையல் திறமையினை வெளிப்படுத்தினர்.
`செட்டிநாட்டுக்கே உரிய தனித்துவமான அசைவ வகைகளுடன்...’முதல் சுற்றில் மட்டன் கிரேவி, சிக்கன் உப்புக்கறி, மட்டன் உப்புக்கறி, கிரீன் சிக்கன், சிக்கன் கேக், மிளகு கோழி மசாலா, கருவாடு மொச்சை குழம்பு, மட்டன் கெட்டிக் குழம்பு, சப்பாத்தி -சிக்கன் கிரேவி, சோளமாவு புரோட்டா- இறால் கிரேவி, நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் பாயா-இடியாப்பம் என்று செட்டிநாட்டுக்கே உரிய தனித்துவமான அசைவ வகைகளுடன் மற்ற பகுதி அசைவ வகைளையும் சமைத்து அசத்தியிருந்தார்கள்.
ஆரோக்கியசாமியுடன் செஃப் தீனாஇது மட்டுமின்றி சைவ வகைகளில் நெய்ச் சோறு, தேங்காய் பால் சாதம் , பேரிச்சம்பழ ஊறுகாய், வெந்தய லேகியம், வாழைக்காய் கோலா உருண்டை, மோதகம், வெள்ளை பனியாரம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கட்லெட், சைவ மீன் குழம்பு, சைவ ஈரல் வறுவல், திருப்பதி வடை, முருங்கைக்கீரை சாதம் ஆகியவற்றோடு ராகி கேக், ராகி கிச்சடி, பூசணி அல்வா, வெற்றிலை லட்டு, கேப்பை கூழ், சங்குப்பூ சட்னி, மூலிகை அடை , பனங்கிழங்கு அல்வா, தூதுவளை லட்டு, தேங்காய் பால் காப்பி, ஆக்ரா பேடா, பூஙணி மண்டி , பேரிச்சம்பழம் லட்டு, மாப்பிள்ளை சம்பா இடியாப்பம், சுவியம் - துவயல், கவுண்டி அரிசி கஞ்சி, ஆடி கும்மாயம், சோயா ஸ்டப்டு உருண்டை, சிறுதானிய அவல் பிரைடு ரைஸ் என பல வகையான உணவுகளை படைத்து அசத்தினர். இவைகளை செஃப் தீனா சுவைத்து பார்த்து அதில் ஆண் போட்டியாளர் உட்பட இரண்டாம் கட்ட போட்டிக்கு 10 நபர்கள் தேர்வு செய்தார்.
இவர்களில் ஆரோக்கியசாமி, ரிஸ்வான பேகம், உமா பிரியா, ஷாஜிதா ஆகியோர் சிறப்பான சமையலுக்காக தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடக்கவுள்ள " சமையல் சூப்பர் ஸ்டார் -சீசன் 2 "வின் இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர்.
வித வித உணவுகள்கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குதாரர்களாக சக்தி மசாலா, எக்ஸோ, சத்யா, கோல்டு வின்னர், அஸ்வின்ஸ், லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இண்டேன், சௌபாக்யா நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.