ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024 ஆகஸ்டு 9-ந்தேதி 34 வயது பெண் மருத்துவர் பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியக முதலில் இந்த வழக்கை கொல்கத்த போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என அங்கு பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தார்.. மதுபோதையில் அந்த நபர் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வ சியல்டா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த ஜனவரி 9- ந்தேதி நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 18ஆம் தேதி அன்று சஞ்சய் ராய் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இன்று நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவித்தது. அதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தது.
சிபிஐ தரப்பு மரண தண்டனை வழ கோரிக்கை வைத்தது. ஆனால், நீதிமன்றம் இது ஒன்று அரிதினும் அரிதான வழக்கு அல்ல எனக் கூறி ஆயுள் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குமாறு தீர்ப்பளித்தது.
இதுபற்றி பேசிய பெண்ணின் தந்தை, எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி தான் வேண்டும் என்றார். இந்த கொடுமைக்கு ₹17 லட்சம் கொடுத்தால் ஈடாகுமா என நெட்டிசன்களும் விமர்சிக்கின்றனர்.