ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி, கும்லா, சிம்தேகா, சாத்ரா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், ரயில் பாதை வசதி இல்லாமல் இந்த நான்கு மாவட்டங்களும் இருந்துள்ளது. இருந்தது.
இந்நிலையில், இந்த மாவட்டங்களில் ரயில் பாதை அமைக்க ஜார்க்கண்ட் ரயில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.
ராஞ்சி - லோகர்தாகா இடையே ஏற்கனவே ரயில் பாதை உள்ளது. அந்த வழித்தடத்துடன் கும்லா, குந்தி, சிம்தேகா ஆகிய மாவட்டங்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..
மொத்தம் 160 கி.மீ., துாரத்துக்கு அமைய உள்ள இந்த ரயில் வழித்தடம், ராஞ்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் என்றும், ரயில் பாதையால் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தலைநகர் ராஞ்சி செல்வது எளிதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.