ஜனவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் விடுமுறை!
Dinamaalai January 22, 2025 07:48 PM


தமிழகம் முழுவதும் ஜனவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமை சலூன் கடைகள் அனைத்தும் மூடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி  ஜனவரி 24ம் தேதி அனைத்து சலூன் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட  நிலையில் முடி திருத்துதல் மற்றும் முகம் மழித்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட மாட்டாது.


மேலும் அன்றைய தினம் கல்வி, வேலைவாய்ப்புல் தனி உன் இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக தான் அன்றைய தினம் சலூன் கடைகள் அனைத்தும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.