தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் இபிஎஸ் சுற்றுப்பயணம் !
Dinamaalai January 23, 2025 09:48 PM

 


 
தமிழகத்தில் 2026 ல் வர இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றன. அந்த வகையில் வரப்போகும் தேர்தலில்  டிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இதனால்  தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அறிவித்துள்ளார்.  ஜனவரி 31ம் தேதி கோவையில் இபிஎஸ் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுக ராணுவம் மாதிரிதான். அம்மா இருந்தபோது எப்படி இருந்தீர்களோ, அதேபோல இருக்க வேண்டும்.
அம்மா இருக்கும் போது என்னை பதவியில் இருந்து தூக்கிவிட்டு வெறும் உறுப்பினராக மாற்றினார். அதேபோல, சிலரது பதவிகள் மாறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக எடப்பாடி பழனிசாமி உயர்த்தியுள்ளார்” என கூறினார்.  பேசிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.