அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்... 13 பேர் பலி!
Dinamaalai January 23, 2025 09:48 PM

அமெரிக்காவில்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு புறம் காட்டுத்தீ காரணமாக 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம் கருகி சாம்பலாகியுள்ளது.  12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமான நிலையில்  25 பேர் உயிரிழந்துள்ளனர்.  மற்றொரு பக்கம் மிக்சிகன், நியூயார்க், பின்சில்வேனியா, மற்றும் மற்ற சில மாநிலங்களில் பனிப்புயலால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த புயலின் காரணமாக 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் 2,100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து. சாலை போக்குவரத்து பாதிப்பு, பள்ளிகள், அலுவலகங்கள் மூடல் என பெரும் தாக்கத்தை பனிப்புயல் உண்டு செய்துள்ளது.குறிப்பாக  புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது. இதன் காரணமாக, மாகாணங்களின் சில பகுதிகளில் பல லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவசரநிலைகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பதிவான பனிப்புயல் அளவு 23 செ.மீ  என்பது   கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியது.இதனால் நகரத்தின் முழுப்பகுதியும் வெள்ளை பனியில் மூடப்பட்டிருப்பது போல காட்சியளிக்கிறது. மேலும், கடும் பனிப்புயலின் காரணமாக 2000க்கும்   மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பனிப்புயலின் தாக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அங்கு நிலவி வரும் மிக மிகக் குறைந்த வெப்பநிலையால் உடல் வெப்பநிலை ஆபத்தான அளவுக்கு குறைந்து, சிலர் ஹைப்போதர்மியாக  பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்  சில பகுதிகளில் பனிமூடப்பட்ட மற்றும் சறுக்கலான சாலைகளில் வாகன விபத்துகள் ஏற்பட்டன அதில் ஒரு சிலர் உயிரிழந்தனர் எனவும் மேலும் ஒரு சிலர் அவசர சிகிச்சை இல்லாமல் சிலர் உயிரிழந்தார்கள் எனவும்  ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.