பிக்பாஸ் டைட்டில் வின்னர் காதலியுடன் திருமணம்... குஷியில் அருண்!
Dinamaalai January 23, 2025 09:48 PM

 

பிக்பாஸ் சீசன் 8ல்  அருண்  பாதியிலேயே எவிக்ட் ஆனார். ஆனால்  அர்ச்சனா 7வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக உள்ளே சென்று டைட்டிலை வென்று அசத்தினார். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக காதலித்துவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்  தங்களது திருமணம் குறித்து அருண் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  சின்னத்திரை சீரியல்களில் நடித்தவர் அர்ச்சனா. அதேபோல் தனியார் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அருண். சீரியல்களில் வில்லியாக நடித்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில்  வைல்டு கார்டு எண்ட்ரி மூலம்  கலந்துகொண்டார் .

தான் வீட்டுக்குள் சென்ற முதல் நாளிலிருந்தே அட்டகாசமான கேமை விளையாடி கொஞ்ச நாட்களிலேயே சக போட்டியாளர்களை வைத்து செய்ய ஆரம்பித்துவிட்டார். முக்கியமாக நிக்சனுக்கும் அவருக்கும் வந்த வாக்குவாதத்தின்போது அர்ச்சனா நடந்துகொண்ட விதம் அந்த சீசனின் ஹைலைட்டாக அமைந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  ஏழாவது சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாதான் என்று ஆரூடம் கூறினார்கள். அதன்படியே அவர் டைட்டில் வின்னராகவும் மாறினார்.  பிக்பாஸ் ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரானதால் மேற்கொண்டு தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனார் அவர்.

அதனையடுத்து  அருள்நிதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.  இந்நிலையில் தனக்கும், அர்ச்சனாவுக்கும் இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என நல்ல செய்தி சொல்லியிருக்கிறார் அருண் பிரசாத். அவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் விரைவில்  பெரியவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.  
இந்த ஆண்டு அர்ச்சனா, அருண் திருமணத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள்.   அருண் பிரசாத், அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.