நடிகர் விஷால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி 2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஜனவரி 21ம் தேதி சுந்தர் சி-யின் பிறந்த நாளுக்கு தனது சினிமா நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார்.
அப்போது நடிகையும், அவரது மனைவியுமான குஷ்பு சுந்தர் சி-க்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சுந்தர் சி ஜனவரி 21ம் தேதி தனது 57வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது குறித்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மதகஜராஜா இதுவரை, தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகள் வசூல்சாதனை படைத்துள்ளது. இப்படியான மகிழ்ச்சியில் இருக்கும் சுந்தர் சி, தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அதில் நடிகர் விஷால், விமல், வடிவேலு, யோகி பாபு, நடிகர் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆர்.ஜே பாலாஜி என பலர் கலந்து கொண்டனர். அதேபோல், நடிகைகளில், மீனா, ஐஸ்வர்யா ராஜேஸ், டிடி நீலகண்டன், வாணி போஜன், ஐஸ்வர்யா, சங்கீதா, பிருந்தா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டனர். உயர்தர நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த பார்ட்டி செம கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்தப் பார்ட்டி குறித்த புகைப்படங்களை கலந்து கொண்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை மீனா பகிர்ந்த புகைப்படங்களில் விஷால் மீனாவின் தோள் மீது கை போட்டு நின்று கொண்டு இருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றது. அதே போல் குஷ்பு, பிறந்த நாள் பார்ட்டியில் சுந்தர்.சி-க்கு காதலோடு முத்தங்கள் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை வீடியோவாக இணைத்த குஷ்பு, தான் நடித்த சிங்கராவேலன் படத்தில் இடம் பெற்றுள்ள, 'இன்னும் என்னை என்ன செய்யப் போகின்றாய் அன்பே அன்பே' என்ற பாடலையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்த போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.