தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக என்ற செய்தியாளர்களை சந்தித்து செல்வ பெருந்தகை கூறியதாவது, தமிழகத்தில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆளுநர் எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமா அவ்வளவு தொந்தரவுகளை கொடுத்து வருகிறார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்க வேண்டும். ஆனால் அவரோ தனியாக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் போன்று செயல்பட்டு வருகிறார்.
எத்தனையோ முறை அவருக்கு கண்டனங்களை பதிவு செய்த போதிலும் அவர் திருந்துவதாக இல்லை. அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு என்ன அதிகாரத்தை கொடுத்துள்ளது அதற்கு உட்பட்ட தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தூக்கி எறிந்து விட்டு ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை பரப்பி வருகிறார். அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் மானம் மற்றும் ரோஷம் உள்ளவர்கள் யாராவது கலந்து கொள்வார்களா.? மேலும் தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரையும் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தையும் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.