மகா கும்பமேளாவில் இதுவரை புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிப்பு..!
Seithipunal Tamil January 24, 2025 05:48 AM

மகா கும்ப மேளாவில் இதுவரை 10 கோடியை தாண்டி  மக்கள் யாத்ரீகர்களாக புனித நீராடியுள்ளதாக உ.பி., அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெருகிறது. இந்த விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக, பக்தர்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றார்கள். இது குறித்து இன்று 23ஆம் தேதி உ.பி., அரசு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இதுவரை புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை, 10 கோடியை தாண்டியது. இன்று மட்டும், மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.

அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின் போது (சுமார் 3.5 கோடி) பக்தர்கள் புனித நீராடினர். 1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர் என்று  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும், பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம் போல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் முக்கிய நீராட்டு விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.