இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 68 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா அணி சார்பில், வருண் சக்ரவர்த்தி 03 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 02 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 12.5 ஓவர்களில் 03 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது.07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் அடித்தார்.
அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் இந்த போட்டியதில், 02 விக்கெட் வீழ்த்தினார். இதனை சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
01. அர்ஷ்தீப் சிங் - 97 விக்கெட்டுகள்
02. சஹால் - 96 விக்கெட்டுகள்
03. புவனேஸ்வர் குமார் - 90 விக்கெட்டுகள்
04. பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா - 89 விக்கெட்டுகள்