சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு அவர் சிறப்பு வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் கூறியதாவது, ரூ.5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவியல் கூறுகின்றது. இதை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கின்றேன். இது தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை.
உலக மானுட இனத்துக்கு மாபெரும் கொடை என்று இதை கூறலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது என்றும், பல்வேறு திருப்பு முனைகளையும் உருவாக்கி உள்ளது என்றும் கூறினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அண்மையத் தொல்லியல் துறை ஆய்வுகள் மூலம் 5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் இரும்பு கால தொடக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் இத்தகைய பங்களிப்புகள், சாதனைகள் நாட்டின் ஒற்றுமை புதுமையை எதிரொலிக்க கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் செழிப்புடன் வெளிப்படும் இந்திய உணர்வுகளை நாம் கொண்டாடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.