சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.60,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒருநாள் ஏறுவதும், அடுத்த நாள் இறங்குவதுமாக தங்கம் விலை உள்ளது. நேற்று முன் தினம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.7,525க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.60,440க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,555க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.