தெலுங்கானாவில் மனைவியை முன்னாள் ராணுவ வீரர் வெட்டிக் கொன்ற சம்பவத்தில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாவட்டம் ஜிலேலகுடா பகுதியில் உள்ள நியூ வெங்கட்ராமா காலணியை சேர்ந்தவர் குருமூர்த்தி. ராணுவத்தில் பணியாற்றிய இவர் விருப்ப ஓய்வு பெற்று தற்போது காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வெங்கட மாதவி.
சமீபமாக தனது மனைவி வெங்கடமாதவியின் நடத்தையில் குருமூர்த்திக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி சண்டையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவியை கொடூரமாக கொன்ற அவர், எலும்பு, சதை உள்ளிட்டவற்றை தனித்தனியாக வெட்டி எடுத்து குக்கரில் வேக வைத்து அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளார்.
ALSO READ:
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. மனைவியை கொல்வதற்காகவே நீண்ட காலமாக திட்டம் தீட்டி வந்த குருமூர்த்தி, பிணத்தை எப்படி மறைப்பது என யூட்யூப் உள்ளிட்டவற்றில் தேடி பார்த்து, குக்கரில் வேகவைக்கும் ஐடியாவை பிடித்துள்ளார்.
மனைவியை கொல்லும் முன் பயிற்சி பெறுவதற்காக தெருவில் திரிந்த நாய் ஒன்றுக்கு சாப்பாடு போட்டு அழைத்து சென்று கொன்று, குக்கரில் அவித்து வீசி ஒத்திகை பார்த்துள்ளார். அதன் பின்னரே மனைவியை கொல்லும் திட்டத்தை அரங்கேற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கு தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K