கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு முதல் மந்திரி அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பை வாபஸ் பெற்றதன் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் கெஜ்ரிவால் வாழ்வில் விளையாடுகிறார்களா? எனஅதிஷி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்-மந்திரியாக அதிஷி செயல்பட்டு வருகிறார்.இந்தநிலையில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. அங்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு முதல் மந்திரி அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு,விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாப் உள்பட 63 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இதுதொடர்பாக முதல்வர் அதிஷி கூறுகையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதன் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் கெஜ்ரிவால் வாழ்வில் விளையாடுகிறார்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.