தமிழக முழுவதும் கல்வி உதவித் தொகை வந்துள்ளதாக கூறி பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து ஆன்லைன் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெறக்கூடிய மாணவர்களுடைய பெற்றோருக்கு கடந்த 2 வாரங்களாக மோசடி கும்பல் ஒன்று தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளது.
மாணவியனுடைய பெயர், பெற்றோரின் உடைய பெயர், அவர்கள் படிக்கக் கூடிய வகுப்பு உள்ளிட்டவற்றை எல்லாம் தெரிவித்து மாணவிக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கிறது, அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்புவதற்காக பெற்றோருடைய வங்கி கணக்கு விவரங்கள் தேவை என்று கேட்டுள்ளனர். இதனால் ஒரு சில பெற்றோர்கள் சுதாரித்துக் கொண்டு மோசடி கும்பல் கேட்கும் அக்கௌன்ட் நம்பர் மற்றும் otp யை தெரிவிக்காமல் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் வங்கியிலிருந்து நேரடியாக கல்வி உதவித்தொகை வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவர்களுடைய விவரம் மற்றும் பெற்றோர்களுடைய பெயர் மற்றும் மொபைல் எண்கள் எப்படி மோசடி கும்பலுக்கு தெரிந்தது என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த மோசடி கும்பலை கண்டுபிடித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.