2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகி இருக்க வேண்டிய இப்பட்டியலானது லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தினால் தாமதமாகி தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்தப் பட்டியலில் 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (EMILIA PEREZ). இந்த திரைப்படமானது ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான்தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு. இதை தாண்டி புரூட்டலிஸ்ட் (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. விக்கட் (WICKED) என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கான்கிளேவ் (CONCLAVE) மற்றும் எ கம்பிளிட் அன்னோன்(A COMPLETE UNKNOWN ) திரைப்படங்கள் 9 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது.
Indian short film - Anujaஎமிலியா பெரெஸ், விக்கட் , டியூன் இரண்டாம் பாகம், தி புரூட்டலிஸ்ட் திரைப்படங்களெல்லாம் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி இருப்பதால் இத்திரைப்படங்கள் இடையே கடும் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா (PRIYANKA CHOPRA) மற்றும் குனீத் மோங்கா (GUNEET MONGA) தயாரித்த `அனுஜா' என்ற குறும்படம் மட்டும் `சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)' பிரிவில் தேர்வாகியுள்ளது.
இதனை தாண்டி இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கும் படங்களின் முழு லிஸ்ட்டை பார்ப்போமா....
சிறந்த படம்
The Brutalist
Anora
Conclave
Emilia Perez
Wicked
A Complete Unknown
The Substance
Dune: Part Two
Nickel Boys
I’m Still Here
97th Academy Awards Nominationsசிறந்த இயக்குநர்
Brady Corbet, The Brutalist
Sean Baker, Anora
James Mangold, A Complete Unknown
Coralie Fargaet, The Substance
Jacques Audiard, Emilia Perez
சிறந்த நடிகை
Demi Moore, The Substance
Mikey Madison, Anora
Karla Sofia Gascon, Emilia Perez
Cynthia Erivo, Wicked
Fernanda Torres, I’m Still Here
97th Academy Awards Nominationsசிறந்த நடிகர்
Adrien Brody, The Brutalist
Ralph Fiennes, Conclave
Timothee Chalamet, A Complete Unknown
Colman Domingo, Sing Sing
Sebastian Stan, The Apprentice
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
The Substance
The Brutalist
Anora
A Real Pain
September 5
97th Academy Awards Nominationsசிறந்த சர்வதேச திரைப்படம்
Emilia Perez
I’m Still Here
The Seed of the Sacred Fig
The Girl with the Needle
Flow
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Flow
The Wild Robot
Inside Out 2
Memoir of a Snail
Wallace and Gromit: Vengeance Most Fowl
97th Academy Awards Nominationsசிறந்த ஆவணப் படங்கள்
No Other Land
Sugarcane
Porcelain War
Soundtrack to a Coup d’Etat
Black Box Diaries
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்
The Man Who Could Not Remain Silent
A Lien
The Last Ranger
Anuja
I’m Not a Robot
97th Academy Awards Nominationsசிறந்த ஆவணப் குறும்படம்
Death By Numbers
I Am Ready Warden
Incident
Instruments of a Beating Heart
The Only Girl in the Orchestra