நாம் அனைவரும் இன்றைய டிஜிட்டல் உலகில் எந்த தகவலையும் பெற வேண்டுமானால் கூகுளை பயன்படுத்தி பெறுகிறோம். கூகுளில் அனைத்து விதமான கேள்விகளுக்கும் தகவல்கள் மிக எளிமையாக பெற முடியும். இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி கூகுளில் சில தகவல்களை பெற முடியாது. மேலும் சில சட்டவிரோதமான தகவல்களை கூகுளில் தேடினால் தேடுபவரின் IP முகவரி நேரடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு சென்றடையும்.
அதன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு. கூகுளில் சட்டவிரோதமாக தேடப்படும் தகவல்களில் சில, வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் தயாரிக்கும் முறையை கூகுளில் தேடினால் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். குழந்தைகள் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களை தேடினால் கண்டிப்பாக சிறை செல்ல நேரிடும். மேலும் இது குறித்து கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஹேக்கிங் இதனை பெரும்பான்மையானோர் ஆர்வத்தினால் தேடுவர். இருப்பினும் நாட்டின் தகவல் பாதுகாப்பு நலன் கருதி இந்திய அரசாங்கம் இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஹேக்கிங் தலைப்புகளில் கூகுளில் தேடினால் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். எனவே இது மாதிரியான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஹேக்கிங் போன்ற தலைப்புகளில் கூகுளில் தேடாமல் இருப்பதே மிகவும் நல்லதாகும். சட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.