பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஓட்டுநர் தவறுதலாக காரை ரிவர்ஸ் எடுக்கையில், ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் பல அடுக்குகள் கொண்ட பார்க்கிங் கட்டிடத்தின் மாடியில் இருந்து கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு காரில் ரோட்டில் விழுந்து நொறுங்கியது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள விமான் நகரில் உள்ள ஒரு இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு சமூக வளாகத்திற்குள், ஒரு கார் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த ஜனவரி 20ம் தேதி நடந்தது. அங்குள்ள பல நிலை பார்க்கிங் வளாகத்தின் இரண்டாவது மாடியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கார் ஓட்டுநர் தற்செயலாக ரிவர்ஸ் கியரை இயக்கியதால், அதன் பின்னால் உள்ள சுவரில் மோதி கீழே தலைகீழாக விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சுவரின் தரம் மற்றும் ஓட்டுநரின் அலட்சியம் குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.