டெல்லி சட்டசபை தேர்தல் விதி மீறல்; 20 கோடி ரூ. மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்..!
Seithipunal Tamil January 24, 2025 10:48 AM

டெல்லி சட்டசபை தேர்தலை நடைபெறவுள்ள நிலையில், அங்கு ரூ.20 கோடி மதிப்பிலான 110.53 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தாக்கல் செய்யப்பட்டது. 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. அத்துடன், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி, இந்த விதிகளை மீறியதற்காக, கடந்த 07-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலான நாட்களில் 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதுவரை 17,879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அவர்களிடம் இருந்து அதிக அளவிலான சட்டவிரோத மதுபானம், உரிமம் இல்லாத ஆயுதங்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 270 உரிமம் இல்லாத ஆயுதங்கள், 44,256 லிட்டர் மதுபானம் (ரூ.1.3 கோடி மதிப்புடைய) மற்றும் ரூ.4.56 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, ரூ.20 கோடி மதிப்பிலான 110.53 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் மற்றும் 1,200-க்கும் மேற்பட்ட ஊசிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.