குடியரசு தினம் விழா எதிர்வரும் ஜனவரி 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த சிறப்பு ரெயில் (06053) சென்னை எழும்பூரில் இருந்து 24-ந்தேதி (நாளை) இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில், தாம்பரம், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, கொடைக்கானல் ரோடு, மதுரை, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக கன்னியாகுமரியை வந்து சேரும்.
மறு மார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து (06054) 26-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,