Erode: கந்துவட்டி கடன் குடும்பத்தையே கதைமுடித்த பயங்கரம்.. மோசடி செயல்களால் நடந்த பெருந்துயரம்.!
Tamilspark Tamil January 24, 2025 05:48 AM
கடன் வாங்க கமிஷன் தொகை என கடனை அடைக்க கடன் வாங்க வைத்தவர்கள், ஒரு குடும்பத்தையே திட்டமிட்டு தற்கொலை செய்ய வைத்த பயங்கரம் நடந்துள்ளது..

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், மீன்கிணறு பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன் (வயது 36). இவரின் மனைவி பாலாமணி (வயது 29). இவர்கள் இருவரும் டைலராக பணியாற்றி வருகின்றனர். தம்பதிகளுக்கு வந்தனா (வயது 10) என்ற மகள், மோனிஷ் (வயது 7) என்ற மகன் இருக்கின்றனர்.

அடைந்த ஜன.15 ம் தேதி அன்று, சிறுமி வந்தன பெற்றோர் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், தனக்கும், தம்பிக்கும் பெற்றோர் கூல்ட்ரிங்சில் மாத்திரை கலந்து கொடுத்ததாகவும் சிறுமி தனது பாட்டியிடம் போனில் தகவல் சொல்லியுள்ளார்.

இதையும் படிங்க:

காவல்துறை விசாரணை

இதனால் அதிர்ந்துபோன மூதாட்டி, அக்கம் பக்கத்தினரிடம் தகவல் சொல்லி அனைவரையும் பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பார்த்தபோது மகன், மருமகள் உயிரிழந்தது உறுதியானது. பிற இரண்டு குழந்தைகளும் மறுநாளே உயிரிழந்தனர். இந்தவிஷயம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி காரணம்

விசாரணையில் தற்கொலைக்கான கடிதமும் கிடைத்தது. அந்த கடிதத்தில், "பெருந்துறை புதுத்தொட்டிபாளையம் பகுதியில் அசித்து வரும் சேது கோபி சங்கர் (வயது 25), நாராயணசாமி (வயது 52), தனசேகரன் மனைவி வெண்ணிலா (வயது 38), சண்முகத்தின் மனைவி சுமதி (வயது 40) ஆகியோர் சுய உதவிக்குழு வாயிலாக பணம் கடன் பெற்று தந்துள்ளனர். இதற்கான கமிஷன் பெற்று ஏமாற்றி இருக்கின்றனர்.

இதனால் நாங்கள் அதிக வட்டிக்கு தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கும் சூழலுக்கு உண்டாகினோம். நிதி நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்ட காரணத்தால், கடனுக்கு உள்ளாகி தற்கொலை செய்கிறோம்" என கூறினார். இந்த விஷயத்தை தொடர்ந்து குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி சங்கர், நாராயணசாமி, வெண்ணிலா, சுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.