சென்னையில் உள்ள பெரியபாளையம், அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மாணவர், அங்குள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறார். இதே கிராமத்தில் திருமணமான 2 குழந்தைகளுக்கு தாய் வினோதினி (வயது 28) வசித்து வருகிறார்.
17 வயதுடைய மாணவர் - வினோதினி இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மாணவர் அக்கா என பேசினாலும், வினோதினிக்கு விபரீத எண்ணம் எழுந்து இருக்கிறது. திருமணம் முடிந்து கணவர், 2 குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மறந்த வினோதினி, மாணவரை காதல் வலையில் வீழ்த்தி நெருக்கம் காண்பித்து இருக்கிறார்.
இதையும் படிங்க:
அக்கா-தம்பி போல நடித்து பகீர்வெளியில் உறவினர்களை நம்ப வைக்க அக்கா - தம்பி போல பழகியவர்கள் காரணமாக, குடும்பத்தினருக்கும் சந்தேகம் எழவில்லை. இதனை சாதகமாக்கிய நிலையில் வினோதினி உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் மாணவர் வீட்டிற்கு வராததால், அவரை கண்டறிந்து தரக்கூறி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மாணவர் - வினோதினி பழக்கம் தெரியவந்தது. இருவரும் கல்பட்டு கிராமத்தில் இருந்த வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கு சென்று அதிகாரிகள் வினோதினியை கைது செய்தனர். மாணவர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: