தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!
Webdunia Tamil January 24, 2025 04:48 AM


தாய்லாந்து நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் என்று அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி திருமணம் என்பது ஆணும் பெண்ணும் என்பதை தனி நபர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கணவனும் மனைவியும் என்பதை திருமணமான தம்பதிகள் என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்து ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தெற்காசிய நாடு என்ற பெருமை தாய்லாந்து நாடு பெற்றுள்ளது. ஆசியாவில் ஏற்கனவே நேபாளம், தைவான் ஆகிய நாடுகளுக்கு பின்னர் மூன்றாவது நாடாக தாய்லாந்து இந்த திருமணத்தை அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்றும் இந்த திருமணங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.