கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ். இவரது மனைவி அன்னம்மாள் (105). 1920ம் ஆண்டு பிறந்தவர் அன்னம்மாள். இந்தத் தம்பதியருக்கு 7 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். கணவா் ஐசரி தாமஸ் 70வது வயதில் உயிரிழந்தாா்.
கொடைக்கானலில் தனது மகன்களுடன் வசித்து வந்த அன்னம்மாள் நேற்றிரவு தனது மகன்களுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காலமானாா்.
இவரது மகன் ஜான் தாமஸ் கொடைக்கானல் நகர அதிமுக அவைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். பேரன், பேத்திகள் உட்பட 145 போ் இவரது நெருங்கிய உறவினா்களாக உள்ளனர். அன்னம்மாளின் உடலுக்கு பழனி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபால், அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் பிச்சை, பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பல்வேறு சபைகளைச் சோ்ந்தவா்கள் அஞ்சலி செலுத்தினா்.