'ஆளுநர் எங்களுக்கு எதிராகச் செயல்படுவதும் நன்றாகத்தான் இருக்கிறது'- ஸ்டாலின் சொல்வதென்ன?
Vikatan January 31, 2025 07:48 PM
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஸ்டாலின், “ வடசென்னையைப் பொறுத்த வரைக்கும்,  நிச்சயமாக இது ஒரு வளர்ந்த சென்னையாக ஒரு ஆண்டுக் காலத்தில் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக  செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளைதான் இன்று  ஆய்வு செய்தேன். ஒவ்வொரு பிரச்னையிலும் ஆளுநர் அரசுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்.

ஸ்டாலின்

அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. எனவே ஆளுநர் அதனைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்குச் சிறப்பு சேர்ப்பதால் அவர் அப்படியே செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.  இந்த வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை. பெரியார் எங்களுக்குத் தலைவர். எங்கள் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்.

ஸ்டாலின்

எனவே அதனை பொருட்படுத்தவும், பெரிதுபடுத்தவும் விரும்பவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த தவறு காரணமாகத் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்று பேசியிருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.