எனக்கு கிடைச்ச இந்த வரம் போதும்… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி
Tamil Minutes February 01, 2025 05:48 AM

மக்கள் ரசிக்கும் வகையில் பாட்டு, பைட், காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரியான விகிதத்தில் கலந்து மசாலா படமாகக் கொடுப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. மக்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக எடுக்கக்கூடியவர். அன்பே சிவம் என்ற கலைப்படத்தைக் கூட அனைவரும் பாராட்டும் வகையில் கமல், மாதவனின் நடிப்பில் இயக்கி இருந்தார்.

தற்போது இவர் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் மதகஜராஜா. விஷால், சந்தானம் நடிப்பில் காமெடி தெறிக்க வந்துள்ள படம். 12 ஆண்டுகளுக்கு முன் பொட்டியில் முடங்கிக் கிடந்த படம் இப்ப வந்தாலும் பட்டையைக் கிளப்புது. காரணம் காமெடிக்கு இப்ப பஞ்சம். சந்தானம் காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகுது. இன்னொன்னு படத்தைக் கொஞ்சம் கூட போரடிக்காம செய்த இயக்குனர் சுந்தர்.சி.

இவர் அரண்மனை என்ற பேய் படத்தையே 4 பாகங்களாக வெற்றிகரமாக காமெடி கலந்து எடுத்தவர். இவர் மற்ற பெரிய இயக்குனர்களுக்கும், தனக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தற்போது பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம். இப்ப இருக்குற நிறைய பெரிய இயக்குனர்களுக்கு பிரச்சனை என்ன என்றால் அவங்க என்னதான் பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் அவங்க படத்துக்கு ஒரு பெரிய ஹீரோ வேணும். பெரிய ஹீரோயின் வேணும்.

பெரிய மியூசிக் டைரக்டர் வேணும். பெரிய கேமரா மேன், பெரிய பேனர் வேணும். இதெல்லாம் அவங்களுக்குத் தேவை. ஆனா எனக்கு எதுவுமே தேவையில்லை. நான் தைரியமாக சொல்வேன். சுந்தர்.சி.என்கிற பெயரை வைத்து எல்லாம் என் படத்தை விளம்பரம் பண்ண முடியும். இத்தனை வருஷத்தில் எனக்கு கிடைத்த வரம் என்றால் அதுதான் என்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.