2025 – 2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அதாவது நாளை தாக்கல் செய்யப்படுகின்றது. இதில் மோடி 3.0 அரசின் இந்த பட்ஜெட் தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். மேலும் மத்திய நிதி அமைச்சர் காலை 11:00 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்குவார்.
கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்ததால் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பின்னர் 2024 ஜூலை 23ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கு முன்பு 2024 25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் www.india budget.gov.in என்ற இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் பட்ஜெட் விவரம் கிடைக்கும். டிடி நியூசில் நேரடியாக நிதி அமைச்சரின் உரை ஒளிபரப்பப்படும்.