திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும் போது சிறுமியின் கால் விரல் துண்டிக்கப்பட்டு வலியில் அலறி துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் இணைக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் சரியான பராமரிப்பு இல்லாததால் தான் விபத்து நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.