பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் இளம்பெண் செல்போனில் பேசியபடி சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பெண் விடாமல் செல்போனை இறுக்கி பிடித்துக் கொண்டார்.
இதனால் செல்போனுடன் சேர்த்து இளம்பெண்ணையும் வாலிபர் இழுத்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை அந்த வாலிபர் விட்டு விட்டு தப்பி சென்றார். அதன் பிறகு பொதுமக்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.