மத்திய பட்ஜெட் 2025 ... என்னென்ன எதிர்பார்ப்புகள்? ஒரு அலசல்!
Dinamaalai February 01, 2025 04:48 PM


 
இன்று பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டின் முதல்  கூட்டத்தொடர்ஆகையால் நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் திரௌபதி முர்மு உரையாற்றினார். அதனை அடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.  இன்று காலை 11 மணிக்கு ‘மத்திய பட்ஜெட் 2025 -2026’-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்   தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


இந்த பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் இருக்குமென கூறப்படுகிறது. அதற்கேற்றாற் போல் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் பிரதமர் மோடி  ஏழை மக்களை அன்னலட்சுமி ஆசிர்வதிக்கட்டும் என பேசினார். இது பட்ஜெட் குறித்த ஒரு குறிப்பு போல பார்க்கப்படுகிறது.


 நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில்  கச்சா எண்ணெய் விலை குறையும், இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும், தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது, வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.  மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்தார். மேலும் வேலைவாய்ப்பின்மை  கணிசமாக குறைந்து உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.
இன்றைய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு,  பழைய வரி விதிமுறை முற்றிலுமாக நீக்கப்பட்டு  புதிய வரி விதிப்பு முறை பின்பற்றப்படும் எனக் கூறப்படுகிறது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.