“நடிகர் விஜயின் அரசியல் பயணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது”… மனம் சிறந்த நடிகை பூஜா ஹெக்டே..!!
SeithiSolai Tamil February 01, 2025 04:48 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழில் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே விஜயின் அரசியல் பயணம் தனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். அதாவது நடிகர் விஜயை திரையில் காண விரும்பும் ஒரு ரசிகையாக அவருடைய அரசியல் வருகை தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அதே சமயத்தில் அவருடைய முடிவை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.