8 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா... டெல்லி அரசியலில் அடுத்தடுத்து பதற்றம்!
Dinamaalai February 01, 2025 04:48 PM

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக  பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது 3வது முறையாக நிலையான ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிரமாக களமிறங்கியுள்ளது.

பாஜக, மீண்டும் டெல்லியில் தனது இருப்பை காட்ட முயற்சிக்கும் முனைப்பில் காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து 8 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி   த்ரியோக்பூரி தொகுதி எம்எல்ஏ ரோஹித், கஸ்தூர்பா நகர் தொகுதி எம்எல்ஏ மதன் லால், ஜனக்புரி தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, பாலம் தொகுதி எம்எல்ஏ பாவ்னா கவுர் உட்பட 8 பேருக்கும் இந்த முறை கட்சித் தலைமை தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கவில்லை. இந்த தொகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் வேறு நபர்கள் களம் காணுகின்றனர். இந்நிலையில் 8 பேரும் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தங்களுக்கு கட்சிதலைமை தேர்தல் நிற்க வாய்ப்பு வழங்காத நிலையில் கடும்  அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியல்

பாவனா கவுர்- பாலம் தொகுதி
பிஎஸ் ஜூன் - பிஜ்வாசன் தொகுதி
பவன் சர்மா - ஆதர்ஷ் நகர் தொகுதி
மதன்லால் - கஸ்தூர்பா நகர் தொகுதி
ராஜேஷ் ரிஷி - ஜனக்புரி தொகுதி
ரோஹித் மெஹ்ரௌலியா - திரிலோக்புரி தொகுதி
நரேஷ் யாதவ் - மெஹ்ராலி தொகுதி
கிரிஷ் சோனி - மடிபூர் தொகுதி

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.