19 கிலோ காஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்தது..!
Newstm Tamil February 01, 2025 04:48 PM

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று (பிப்.,01) வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து, ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதமும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.