கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார். இந்த நிலையில் மாதேஸ்வரன் தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு அடம்பிடித்துள்ளார்.
உடனே நடேசன் சோள முடிந்ததும் வாங்கி தருகிறேன். அதுவரை பொறுமையாக இரு என கூறியுள்ளார். அதனை ஏற்க மறுத்த மாதேஸ்வரன் பெற்றோர் காட்டு வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.