இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட வாரிசு நடிகரும், வீட்டம்மாவும் ஆடும் ஓவர் ஆட்டம்.. கடுப்பில் ரசிகர்கள்
CineReporters Tamil February 01, 2025 08:48 AM

Gossip: பிரபலங்கள் பொதுவாக முதல் திருமணத்தை முறித்துக்கொண்டு இரண்டாம் திருமணம் செய்யும் போது அடக்கி வாசிப்பார்கள். ஆனால் இரண்டாம் திருமணம் செய்த அக்கட தேச நடிகர், ரோஸ்மில்க் நடிகையை வெறுப்பேற்றி வருவதாக கூறப்படுகிறது.

தமிழில் நதி பெயர் வைத்த படங்களில் நடித்த நடிகை ஒய்யாரமாக தமிழில் சுற்றி வந்தார். அவருக்கு இங்கும் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ஏகப்பட்ட படங்கள் கிடைக்க அம்மணி பிஸியாக நடித்து வர காதல் வலையில் சிக்கி அக்கட தேசத்து வாரிசு நடிகரை மணமுடித்தார்.

நடிகருக்கு கூட இல்லை நடிகைக்காக அந்த ஜோடியை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் இருவரும் திருமணத்துக்கு பின்னர் பெரிய அளவில் வெளியில் தலைக்காட்டவே இல்லை. எப்போதுமே இருவரும் தனியாகவே காணப்பட்டனர். திருமணத்துக்கு பின்னரும் நடிகை பிஸியாக நடிக்க தொடங்கினார்.

ஓகே நோ பாடலில் நடிக்க அங்கே பிரச்னை வெடித்தது. இருவரும் விவாகரத்துக்கு வழி வகுத்ததாக சொல்லப்பட்டாலும் திருமணத்துக்கு பின்னர் நடிகருக்கு தற்போது வீட்டம்மாவுடன் ஊடல் வந்ததாக கூறப்படுகிறது. அதை நடிகை கண்டுபிடிக்க திருமணத்தை தூக்கி போட்டதே உண்மை எனக் கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து பல இடங்களில் தற்போதைய வீட்டம்மாவுடன் வாரிசு நடிகர் புகைப்படங்களில் சிக்க கடந்த வருடம் அடுத்த திருமணத்தையே வெகு விமரிசையாக பண்ணிக்கொண்டார். ஆனால் அதை செய்துக்கொண்டு அடங்காமல் அவர்கள் போடும் சீன் தான் தற்போதையை ஹாட்டாப்பிக்காகி இருக்கிறது.

சமீபத்தில் வாரிசு நடிகர் தன்னுடைய பட விழாவில் கூட என்னுடைய படம் ஓடவில்லை என்றால் என்னுடைய வீட்டம்மா கலாய்ப்பார் எனப் பேசி மனைவி கொடியை தூக்கி பிடித்தார். அதுமட்டுமல்லாமல் வீட்டம்மாவும் கணவருடன் அடிக்கடி கேமராவில் சிக்குவது மட்டுமல்லாமல் அதில் நெருக்கம் காட்டி சீன் போட்டு முதல் மனைவி நடிகை கடுப்பேத்தும் வேலையை செய்து வருகின்றனராம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.