2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். வருமானவரி விலக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் பட்சத்தில் எந்த ஒரு திட்டமும் இடம்பெறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டமும் கிடையாது. மத்திய அரசு நம் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். எங்கு தேர்தல் நடக்கிறதோ எங்கு அவர்களின் கூட்டணி ஆட்சியில் இருக்கின்றதோ அங்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என உதயநிதி ஸ்டாலின் கட்டமாக பேசியுள்ளார்.