தொண்டையில் காளை முட்டியதால் இளைஞர் பலி! ஜல்லிக்கட்டை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்
Top Tamil News February 02, 2025 03:48 PM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நிகழ்ச்சியில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் 39 பேர் காயமடைந்தனர்,ஒருவர் பலியானார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனுர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உறுதிமொழி வாசித்தார் தமிழக ஆதிதிராவிடர் துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது பார்வையாளர்களாக வந்த 18 நபர்களும் காலையில் உரிமையாளர்கள் 11 நபர்களும் காளைகள் முட்டி பலத்த காயமடைந்தனர். இதில் ஆத்தூர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவரின் 23 வயது மகன் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் பார்வையாளராக வந்த நிலையில் தொண்டைப் பகுதியில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்த அவசர சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி தாமஸ் ஆல்வா எடிசன் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.