தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வரும் நிலையில் ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சி என்பது மக்களை கவரும் வகையில் சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முடிந்த அளவிற்கு திமுகவினர் நிறைவேற்றிவிட்டனர். அதேசமயம் சமீபத்தில் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இன்னும் ஓராண்டு காலம் திமுக ஆட்சி உள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் இளைஞர்கள் துரத்திச் சென்ற விவகாரம் பெரும் புயலை கிளப்பி இருந்தது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவை பழிவாங்குவதற்கு வேண்டுமென்றே இப்படி ஒரு செயலில் ஈடுபடுகின்றனர்.
திமுக கொடியை கட்டிக்கொண்டு திட்டமிட்டு ஒரு சதி நடக்கிறது. திமுக ஆட்சியில் ஒன்றும் செய்ய முடியவில்லை. எட்டு முறை மோடி வந்தோம் பாராளுமன்றத்தில் அனைவரையும் நம்ம தளபதி ஸ்டாலின் அலற விட்டு விட்டார். தமிழ்நாட்டில் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது. முதல்வரை அனைவரும் அப்பா அப்பா என்று அழைப்பதை இப்போதுதான் நானே தமிழக அரசியலில் பார்க்கிறேன் என ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.