தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது தன்னுடைய 45 வது திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடித்த போது த்ரிஷா பற்றி பேசியது சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில் தற்போது திரிஷா நடிக்கும் அதே படத்தில் மன்சூர் அலிகான் ஒப்பந்தமாகியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்தப் படத்திற்கு பேட்டைக்காரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது கோவை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.