வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் போட்டி.. புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி முடிவு!
Seithipunal Tamil February 03, 2025 05:48 AM

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறு தொகுதிகளிலும் புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலும் மற்ற இடங்களில் கொள்ளை ரீதியான கூட்டணி அமைத்து மண்வெட்டி சவுல் சின்னத்தில் போட்டியிடுவது என புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தமிழ்நாடு அமைப்பின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில குழு தோழர்கள் அமைப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் ,புதுவையை சேர்ந்த ஏரளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அப்போது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, பிரேமச்சந்திரன், M.P., ஆகியோரின் கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் செயல்படுகிற காரணத்தினால் விழுப்புரம். கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை. மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் RSP கட்சியை கூண்டோடு கலைத்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு அமைப்பில் இணைத்துக் கொண்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இம்மாநில குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டகுழு தோழர்கள் புதுச்சேரி மாநில தோழர்கள் தங்கள் மாவட்டங்களில் மே 1 தேதிக்குள் கிளை. ஒன்றியம், மாவட்ட மாநாடுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு என்ற நமது கட்சியின் மீதும் நம்மீதும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை பத்திரிக்கை வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் அவதூறாக பரப்பி வருகின்ற RSP கட்சியின் தோழர்கள் பணத்தை கொள்ளை அடித்த நபரும், CPI கட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டடு UCPI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மீண்டும் பதவிக்காக CPI கட்சிக்கு தாவிய நிலையில் அங்கிருந்து அக்கட்சியின் தலைமை மற்றும் தோழர்களால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் RSP கட்சி தலைமையிடம் பதவிக்காக லட்ச கணக்கில் லஞ்சம் கொடுத்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கு முற்றிலும் மாறுப்பட்ட நிலையில் தன்னை இணைத்துக் கொண்ட உடனே மாநிலச் செயலாளர் பதவி பெற்ற சேலம் மாவட்டத்தை சார்ந்த ஜீவானந்தத்தை மக்கள் மத்தியிலும் பொதுவெளியிலும் விரட்டியடிக்கும் விதமாக பொதுகூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்துவது எனவும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறு தொகுதிகளிலும் புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலும் மற்ற இடங்களில் கொள்ளை ரீதியான கூட்டணி அமைத்து மண்வெட்டி சவுல் சின்னத்தில் போட்டியிடுவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.