ரூ10 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்று மனைவி கள்ளக்காதலனுடன் தப்பி ஓட்டம்!
Dinamaalai February 03, 2025 10:48 PM

மேற்குவங்க மாநிலத்தில் ஹௌரா மாவட்டத்தில்  வசித்து வந்த கணவன் மனைவிக்கு   10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் அந்த மனைவி தன் கணவனிடம் 10 வயது மகளின் எதிர்காலத்தை உறுதி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். மகளின் வருங்கால திருமணம் மற்றும் குடும்ப பொருளாதாரம் இவைகளை  உறுதி செய்யுமாறு கணவனுக்கு தொடர்ந்து மனைவி  அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். உடனடியாக கணவன்  தன்னுடைய கிட்னியை விற்க  முடிவு செய்தார்.

கடந்த ஒரு வருடமாக கிட்னியை வாங்குபவரை  அந்த கணவன் தேடி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கிட்னியை விற்பனை செய்தார்.இதன் மூலம் அவருக்கு 10 லட்ச ரூபாய் கிடைத்தது. ஆனால் இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவருடைய மனைவியோ முகநூல் மூலம் அறிமுகமான கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தன்னுடைய மனைவி கள்ளக்காதலுடன் சென்றதை அறிந்த கணவர் அவர் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு சென்றார்.

அப்போது அவர் விரைவில் விவாகரத்து நோட்டீஸ் வழங்குகிறேன் இங்கிருந்து செல்லும்படி கூறிவிட்டார்.  அந்த கணவன் மன வேதனையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இச்சம்பவம் குறிட்து  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.