குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் செல்போனை உருவாக்கவில்லை உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து தருகிறோம். உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது. எனவே இந்தியா உற்பத்தியில் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
உற்பத்தியை விடுத்து நுகர்வில் கவனம் செலுத்தினால் பற்றாக்குறை ஏற்படும். உற்பத்தி துறையை இந்தியா பலப்படுத்தினால் அமெரிக்க அதிபர் பதவியேற்க விழாவிற்கு எங்கள் பிரதமரை அழையுங்கள் என கூறி வெளியுறவு அமைச்சரை நாம் அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய தேவை வராது என மக்களவையில் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உடனே உங்கள் மன அமைதியை கெடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.