பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம் என்றும் இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது என்றும் ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை என சீமான் குற்றம்சாட்டினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது என கூறினார் .
மேலும் ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன என்றும் அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர் என சீமான் கூறினார்.
மேலும் எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை என்றும் அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார் என்றும் நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம் என சீமான் பேசினார்.
.
அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன் என்றும் சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள் என்றும் கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள் என கூறினார்.
60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம் என்றும் தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம் என்றும் மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள் என சீமான் அப்போது பேசினார் .
தொடர்ந்து பேசிய சீமான் பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு பேசிய சீமான் பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள்என்றும் 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது என கூறினார் .
மேலும் பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன் என ஆவேசமாக பேசினார்.
என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள் என்றும் வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி என இவ்வாறு சீமான் அவர் பேசினார்.