தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.எம் பட்டி தெற்கு தெருவில் மெய்யப்ப போஸ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று மெய்யப்ப போஸ்க்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான பணிகளில் இரு குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மெய்யப்ப போஸ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மெய்யப்ப போஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.